பென்னாகரம் பழைய பஸ் நிலையம் மற்றும் கடைவீதி பகுதியில் சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் அரசு, தனியார் பஸ்கள் சாலையின் நடுவே பொதுமக்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். ஆக்கரமிக்கப்பட்ட கடைகளால் தினமும் காலை ,மாலை வேளைகளில் அதிகப்படியான வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், பென்னாகரம்.