ஆபத்தான குழிகள்

Update: 2024-08-11 11:57 GMT

கோவை சின்னவேடம்பட்டி கோதண்டராமர் கோவில் முன்பு அத்திப்பாளையம் மெயின் ரோடு மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. அங்கு ஆங்காங்கே ஆபத்தான குழிகள் ஏற்பட்டு உள்ளன. அந்த குழிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதில் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். மேலும் பாதசாரிகளும் தவறி விழுந்து வருகின்றனர். எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்படும் முன்பு அந்த குழிகளை மூட சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்