ராதாபுரம் தாலுகா செட்டிகுளம் புறவழிச்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் ஊருக்குள் உள்ள சாலை வழியாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாணவர்கள், பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சேதமடைந்த புறவழிச்சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.