திருச்செங்கோடு-ராசிபுரம் சாலையில் பாலப்பாளையம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் சமீபத்தில் ‘தினத்தந்தி' செய்தி எதிரொலியாக வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் வேகத்தடை அமைக்கப்பட்டு வர்ணம் பூசாமல் விடப்பட்டது. இதனால் இந்த வழியாக இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வேகத்தடைக்கு அவசியம் வர்ணம் பூசி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கர்ணன், ராசிபுரம்.