சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-08-04 17:30 GMT

வெண்ணந்தூர் காமராஜ் சிலை முதல் அண்ணா சிலை வரை உள்ள பிரதான சாலையில் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக தார்சாலை தோண்டப்பட்டது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்பட்டது. ஆனால் அங்கு தார்சாலை அமைக்காததால் மணல் துகள்கள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்ணில் விழுகின்றது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து சாலை பணியை முடிக்க முன் வருவார்களா?

-சண்முகம், வெண்ணந்தூர்.

மேலும் செய்திகள்