பர்கூரில் இருந்து எமக்கல்நத்தம் செல்லும் சாலையில் நாள் ஒன்றுக்கு 10-க்கும் மேற்பட்ட நகர பஸ்களும், 30-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த சாலை செல்லும் சின்ன பர்கூர் பகுதியில் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாஸ்கர், கிருஷ்ணகிரி.