வேகத்தடை வேண்டும்

Update: 2024-07-28 18:20 GMT

சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையம் அருகில் பிரதான சாலையோரம் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகள் அதிகளவில் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் இருபுறமும் வேகத்தடை இல்லை. மேலும் இது பிரதான சாலையாக இருப்பதால் வாகனங்கள் மிக வேகமாக சென்று வருகின்றன. எனவே குழந்தைகளின் பாதுகாப்பு கருதி சாலையின் இருபுறமும் வேகத்தடைகள் அவசியம் அமைத்து தர வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

-சல்மான்கான், சின்னத்திருப்பதி.

மேலும் செய்திகள்