பர்கூர்- திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் எமக்கல் நத்தம் பிரிவு சாலை உள்ளது. இந்த பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பிரதான குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாக வாய்ப்பு உள்ளது. இந்த குடிநீர் குழாய்களை அதிகாரிகள் தாமதம் இன்றி உடனடியாக சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், பர்கூர்.