சூளகிரி பஸ் நிலையத்தில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலை பல இடங்களில் பழுதடைந்து காணப்படுகிறது. குறிப்பாக சூளகிரி மேம்பாலத்தில் இருந்து சிறிது தொலைவில், கேபிள் ஒயர்கள் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டு மண் முழுவதும் சாலையில் கொட்டப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. ஆனால் கேபிள் ஒயர்கள் பதிக்கப்படவில்லை. சாலையும் சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக அடிக்கடி விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது. எனவே சூளகிரி-உத்தனப்பள்ளி சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனியப்பா, சூளகிரி