திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை கிராமத்தில் மண்டபம் முதல் நடேசன் தோப்பு வரை உள்ள சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. இந்த தார்சாலையானது மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.