ஆபத்தான பயணம்
திருப்பூர் யூனியன் மில் சாலையில் ஏராளமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தசாலையில் வளம்பாலம் சந்திப்பு பகுதியில் சாலையில் ஏற்பட்ட பெரிய குழி சமீபத்தில் சரி செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் அங்கு பள்ளம் ஏற்பட்டதால் இரும்பு தடுப்புகள் வைத்திருந்தனர். தற்போது காற்று பலமாக வீசுவதால் அந்ததடுப்பு கீழே விழுந்துள்ளது. இதனால் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த இரும்பு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.
குமார், திருப்பூர்.