குனியமுத்தூரில் இருந்து பி.கே.புதூர் வரை உள்ள கோவை-பாலக்காடு சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அங்கு பாதாள சாக்கடை பணிக்காக சாலை தோண்டப்பட்டு உள்ளதால் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இந்த பணி 6 மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டது. ஆனால் இதுவரை சாலையை சீரமைக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் தினமும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த சாலையை விரைவாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.