நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் சாலையில் திருப்பதிசாரத்தில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு சாலையின் ஒரு பகுதி வரை லாரிகளை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கின்றனர். இதனால், பிற வாகனங்கள் செல்வதற்கு போதிய இடவசதி இல்லாம் உள்ளதால் விபத்துக்குள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சுங்கச்சாவடி பகுதியில் லாரிகளை மற்ற வாகனங்களுக்கு இடையூறின்றி நிறுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எட்வின் கிளாரன்ஸ், வெள்ளமடம்.