மதுரை மாவட்டம் சோழவந்தானில் சில மாதங்களுக்கு முன்பு புதிதாக ெரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்நிலையில் பாலத்தின் மையப்பகுதியில் சாலை பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பாலத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.