சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-07-14 17:00 GMT


மதுரை மாவட்டம் சிலைமானில் இருந்து கருப்பாயூரணிக்கு செல்லும் வழியில் உள்ள மெயின்ரோடு சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பயணிக்க முடியாத நிலை உள்ளது. அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகின்றன. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்