போக்குவரத்து இடையூறு

Update: 2024-07-14 11:32 GMT

ஊட்டி நகருக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அத்துடன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த உள்ளூர் மக்களும் அத்தியாவசிய தேவைக்காக நகருக்குள் வருகின்றனர். ஆனால் அங்கு வாகனங்களை நிறுத்த போதிய வசதி இல்லை. இதனால் சாலையோரங்களில் தாறுமாறாக நிறுத்தி செல்கின்றனர். இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே வாகனங்கள் நிறுத்த போதிய வசதி ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்