வேகத்தடையில் வர்ணம் பூசலாமே!

Update: 2024-06-30 17:17 GMT

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு சாலைகளில் வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படாததால் பல இடங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கிறார்கள். குறிப்பாக கிருஷ்ணகிரி நகரில் சப்-ஜெயில் சாலையில் உள்ள வேகத்தடைகள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. எனவே சாலைகளில் உள்ள வேகத்தடைகள் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் வர்ணம் பூச வேண்டும். மேலும் இரவில் ஒளிரும் விளக்குகளை பொருத்த வேண்டும்.

-சந்தோஷ், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்