வெள்ளை கோடுகள் தேவை

Update: 2024-06-30 11:58 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் துவரங்குறிச்சி முக்கூட்டு சாலை பகுதியில் நான்கு சாலை சந்திக்கும் இடம் உள்ளது. இப்பகுதியில் விபத்துகளை தவிர்க்க வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் வேகத்தடைகளில் வெள்ளைகோடுகள் வரையப்படாமல் உள்ளது. இதனால் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளைகோடுகள் வரைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்