குண்டும், குழியுமான சாலை

Update: 2024-06-30 10:25 GMT

கோவைப்புதூரில் இருந்து உக்கடம் செல்லும் வழியில் உள்ள புட்டுவிக்கி சாலையானது மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அங்கு சில இடங்களில் ஆபத்தான பள்ளங்களும் ஏற்பட்டு உள்ளதால், வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்