குண்டும், குழியுமான சாலை

Update: 2024-06-23 17:25 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மொளசி ஊராட்சி மொளசி மூணு இட்டேறி முக்கில் இருந்து வக்கீல் தோட்டம் வரை உள்ள சாலை சேதமடைந்துள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை அதிகாரிகள் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனி, நாமக்கல்.

மேலும் செய்திகள்