கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து நாள்தோறும் பொதுமக்கள் பல்வேறு பணி நிமித்தமாக சூளகிரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளுக்கு வந்து செல்கிறார்கள். சூளகிரி - உத்தனப்பள்ளி சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகள் பலர் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே சாலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபு, சூளகிரி.