மதுரை கொட்டாம்பட்டியில் இருந்து பாண்டாங்குடி விலக்கு வரை செல்லும் சாலை முற்றிலுமாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. மேலும் ஆங்காங்கே பெரிய பள்ளங்களும் உள்ளன. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலைகளை சீரமைக்க வேண்டும்.