திருப்பூர் சின்னபொம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கொங்கு மெயின்ரோடு, கஞ்சம்பாளையம், பிச்சம்பாளையம்புதூர் ஆகிய பகுதிகளுக்கு தனித்தனி ரோடுகள் செல்கின்றன. இந்த 3 ரோடுகளும் சந்திக்கும் பகுதியில் சிறிய வேகத்தடையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கஞ்சம்பாளையம் செல்லும் வழியில் ஜே.பி. நகரில் ‘எஸ்’ வடிவில் மிகவும் அபாயகரமான வளைவு உள்ளது. இந்த அபாய வளைவின் இரு முனைகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.