கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா குட்டூர் ஊராட்சி ஜிஞ்ஜம்பட்டியில் இருந்து ஆம்பள்ளி வரை செல்லும் சாலையில் நகர, புறநகர மற்றும் தனியார் கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையை பிரதான போக்குவரத்து சாலையாக 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ள சாலையை முழுமையாக அகற்றி விட்டு தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், பர்கூர்.