சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா அலுவலகம் அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்்தது. சமீபத்தில் நடைபெற்ற சாலை விரிவாக்க பணியின் போது வேகத்தடை அகற்றப்பட்டது. ஆனால் சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்தும் இன்னும் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், தாரமங்கலம்.