சங்கராபுரம் அருகே மூலக்காட்டில் உள்ள மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதான சாலையில் இருந்து பள்ளிக்கு செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?