தேவூர் அருகே கொட்டாயூர் பகுதியில் எடப்பாடியில் இருந்து கல்வடங்கம் செல்லும் சாலையும், கோனேரிப்பட்டியில் இருந்து குமாரபாளையம் செல்லும் சாலையும் கொட்டாயூரில் சந்திக்கிறது. இந்த பகுதியில் நான்கு ரோடுகளும் சந்திக்கும் இடத்தில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கோவிந்தராஜ், கொட்டாயூர்.