நாமக்கல் பஸ்நிலையம் நகரின் மைய பகுதியில் அமைந்து உள்ளது. இங்கு தினசரி நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ்நிலையத்தின் உட்புற பகுதியில் குறிப்பாக சேலம் பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகே சாலை பழுதாகி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. எனவே பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த குழிகளில் பஸ் ஏறி இறங்கும் போது அதன் உதிரி பாகங்களும் பழுதாகி வருகிறது. எனவே பஸ்நிலையத்தின் உட்புறத்தில் உள்ள குழிகளை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.