குண்டும், குழியுமான சாலை

Update: 2024-06-02 17:12 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சி 15-வது வார்டில் சஞ்சீவி செட்டி தெரு உள்ளது. இந்த பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சிமெண்டு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் இதே பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாராத காரணத்தினால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இப்பகுதி மக்களின் அடிப்படை வசதியான சிமெண்டு சாலையை சீரமைத்து கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-தமிழ், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்