கடலூர் அருகே கூத்தப்பாக்கத்தில் விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணிகள் மிகவும் மந்தமாக நடக்கிறது. மேலும் சாலையில் புழுதி பறக்காமல் இருக்க தண்ணீர் தெளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது புழுதி பறக்கிறது. இதன் காரணமாக சில நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் கூட கண்ணுக்கு தெரியாமல் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.