சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு சாலையோர பள்ளத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இது குறித்த செய்தி படத்துடன் தினத்தந்தியின் புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து தேங்கி நின்ற மழைநீரை அகற்றியதோடு, சாலையோர பள்ளத்தில் மண்ணை கொட்டி அதிகாரிகள் சரி செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.