தேனியில், மதுரை சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதையொட்டி வாகனங்கள் சென்று வருவதற்காக பாலத்தின் இருபுறமும் பாதை உள்ளது. ஆனால் அந்த பாதை, மண்பாதையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த பாதையில் புழுதி பறப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே தற்காலிக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.