ஆபத்தான பள்ளம்
திருப்பூர் வளம் பாலம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் ஓலையை வைத்து மறைத்துள்ளனர். யூனியன் மில் சாலையில் இருந்து வளம் பாலம் செல்லும் சாலைக்கு திரும்பும் இடத்தில் உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் உள்பட பலரும் பள்ளத்தை கவனிக்காமல் நிலை தடுமாறும் நிலை உள்ளது. போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் வாய்ப்பு உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் பள்ளத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
-அருண்குமாா், திருப்பூா்.