தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மேலவழுத்தூர் ஊராட்சி பகுதியில் பூக்கொல்லைத்தெருவில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் சாலை முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. இதனால் சாலை குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?