தஞ்சையை அடுத்த பூதலூர் தாலுகா அகரப்பேட்டை கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே உள்ள சாலை முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. இதனால் சாலை குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?