குண்டும், குழியுமான சாலை

Update: 2024-05-26 17:27 GMT

நாமக்கல்- திருச்சி சாலையில் பொன்விழா நகருக்கு செல்லும் நுழைவு வாயில் சாலை ஏற்கனவே பழுதான நிலையில் இருந்தது. சமீபத்தில் பெய்த மழைக்கு இந்த சாலை மேலும் பழுதாகி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் மாருதிநகர் நடுநிலைப்பள்ளி உள்ளதால், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குண்டும், குழியுமான இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கர், நாமக்கல்.

மேலும் செய்திகள்