மீன்சுருட்டியில் இருந்து குண்டவெளி சலுப்பை கிராமம் வழியாக செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. அவசர காலங்களில் கூட இந்த சாலையில் செல்லமுடியாத நிலையில் உள்ளது. உடனடியாக இந்த சாலையை மாநில சாலையாக தரம் உயர்த்தி சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.