சங்கராபுரம் அருகே குளத்தூர் அக்ரஹாரதெரு வழியாக விரியூர் செல்லும் தார் சாலையில் போக்குவரத்து அதிகமுள்ள இடங்களில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்னதாக முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.