முதுகுளத்தூரில் உள்ள கந்தசாமிபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் உள்ள சாலையானது மண்சாலையாக உள்ளது. தற்போது பெய்த கோடைமழையினால் மழைநீர் தேங்கி சேறும், சகதியாக உள்ளது. இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.