தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா நான்கு ரோடு சாலை, திருக்காட்டுப்பள்ளி சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்குவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். பொதுமக்களும் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் இனிவரும் காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?