கிருஷ்ணகிரியில் 5 ரோடு ரவுண்டானா - சேலம் சாலையில் தற்போது புதிதாக பல இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்கள் வேகமாக செல்லாமல் இருப்பதற்காகவும், விபத்துக்களை குறைப்பதற்காகவும் இந்த வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்த வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் செல்வதால் இரவு நேரங்களில் அந்த பகுதிகளில் விபத்துக்கள் நடக்கின்றன. பகலில் தெரியும் வேகத்தடைகள் இரவு நேரத்தில் தெரிவதில்லை. எனவே இரவிலும் வேகத்தடை தெரியும் வகையில் அதில் வர்ணம் பூச வேண்டும் என்றும், ஒளிரும் விளக்குகள், பட்டைகள் பொருத்த வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
-சமீர், கிருஷ்ணகிரி.