நாமக்கல் பிரதான சாலையில் அரசு தொடக்கப்பள்ளி அமைத்துள்ளது. இந்தப்பள்ளி முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது. இது பலப்பட்டரை மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் பாதுகாப்பாக இருந்தது. இதற்கிடையே நரசிம்மசாமி கோவில் தேரோட்டத்தின் போது இந்த வேகத்தடை அகற்றப்பட்டது. விபத்து அபாயம் இருப்பதால், மீண்டும் இந்த வேகத்தடையை அவசியம் அமைக்க வேண்டும்.