குண்டும், குழியுமான சாலை

Update: 2024-04-28 17:35 GMT

பென்னாகரம் ஒன்றியம் ஒன்னப்பகவுண்டனஅள்ளி ஊராட்சி மாக்கனூர் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள தார்சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த தார் சாலை நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக பூச்செட்டிஅள்ளி, மூக்கனஅள்ளி, ஆண்டியூர், பேடரஅள்ளி, சோளப்பாடி, தளவாய்அள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்கு இருசக்கர வாகனம் மற்றும் டவுன் பஸ், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-மதி, மாக்கனூர்.

மேலும் செய்திகள்