தென்பேரில் இருந்து சின்னதச்சூர் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையின் ஆங்காங்கே சிறு, சிறு பள்ளங்கள் மற்றும் கற்கள் பெயர்ந்தும் காணப்படுகின்றன. இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.