தேனியில், மதுரை சாலையில் மேரி மாதா பள்ளியில் இருந்து அரண்மனைப்புதூர் விலக்கு வரை ரெயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி அங்கு ஏற்கனவே இருந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையில் உள்ள பள்ளங்களில் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?.