சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 4 ரோடு செல்லும் வழி பிரதான சாலையாக உள்ளது. இந்தசாலையில் தினமும் ஏராளமான கார், பஸ், ஆட்டோ போன்ற வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையின் நடுவே விபத்தை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமான குழி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். வாகனஓட்டிகள் தினமும் கீழே விழுந்து காயமடைகிறார்கள். ஏதேனும் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-இனியவர்மன், சேலம்.