ராசிபுரம் -திருச்செங்கோடு செல்லும் சாலையில் பாலப்பாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே சாலை விரிவாக்கத்திற்கு முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. சாலை விரிவாக்கத்தின் போது ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த வேகத்தடை அகற்றப்பட்டு மீண்டும் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இந்த இடத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றன. எனவே, பாலப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே மீண்டும் வேகத்தடை அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
-தருண், ராசிபுரம்.