கோவை கணபதி பாலமுருகன் நகரில் இருந்து மணியகாரம்பாளையம், நல்லாம்பாளையம், உடையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தார்சாலை செல்கிறது. இந்த சாலை பல இடங்களில் உடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.