மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு மாப்படுகை இணைப்பு சாலை குண்டும்,குழியுமாக இருக்கிறது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை போக்குவரத்துக்கு பயனற்ற முறையில் காட்சி அளிக்கிறது. பொதுமக்களும் சிரமத்துடன் சாலையில் நடந்து செல்கின்றன. குண்டும்,குழியுமான சாலையினால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்லக்கூடிய நிலை உருவாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.