மதுரை மாவட்டம் பேரையூர் அரசமர பஸ் நிறுத்தம் அருகில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் நீர் கசிந்து செல்கிறது. மேலும் இதனால் நீர் கசியும் இடத்தில் புதிதாக பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த சாலையும் கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து வருகிறது. இதனால் அவ்வழியே நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?